ஆடி மாதம்
By Rajesh
காதல் வேகம்
குறுங்கதை.
ஆடி முதல் நாள். இரண்டு நாள் முன்னதாக தான் திருமணம் ஆனது லட்சுமிக்கு. பாலிடெக்னிக் படித்து முடித்து சில ஆண்டுகள் வீட்டில் எல்லா வேலையும் செய்து கொண்டு ஒருவழியாக மாப்பிளை பார்க்கும் படலம் எல்லாம் முடிந்து திருமணம் முடிந்தது. இப்போது மறுபடியும் அம்மா வீட்டுக்கு வருகிறாள் மாலையும் கழுத்துமாக சந்தோசமாக.மாமியார் வீட்டில் ஒருவழியாக சொல்லி விட்டு மாப்பிள்ளையுடன் மெதுவாக பேருந்து நிறுத்தம் நோக்கி நகர்கிறாள். சட்டு என்று அவள் மீது ஒரு துளி. மல்லி பூ தோளில் விழுந்தது என எண்ணினாள்.சற்று நேரத்தில் சடசட என மழை வலுத்தது... மேலும் மின்னல் வெட்டியது. சற்று நேரத்தில் இடி முழங்க மாப்பிளையை கட்டி புடித்துக்கொண்டாள்....கொஞ்ச நேரத்தில் பேருந்து வந்து விட வே இருவரும் சுதாரித்து ஏறிக்கொண்டனர். மனமும் கண்ணும் அடிக்கடி வெட்டிக்கொண்டு பேருந்தும் தறிக்கெட்டு தாறுமாறாக ஓட இருவரும் மறந்தே போனார்கள் ஆடி மாசம் பிரிய போகிறோம் என்பதை....







