அமைதியின் தேடல்
By Vs prabha
ஆழ்ந்த அமைதியின் மறுபக்கம்
அமைதியின் தேடல்
************************
தலைவலித்தது,,
டி.வி.யில் News சேனலை பார்த்து , எங்கு பார்த்தாலும் கொலை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, இயற்கை சீற்றங்கள், உயிர்சேதம்,,,,, என எண்ணிலடங்காதவை அப்பப்பா,,!
அம்மா ! ஒரு coffee ,
என்ன வாழ்க்கை இது ,!
டெய்லி நம்ம நாட்டுல நடக்குற விஷயங்களை பார்க்கும்போதே
தலைவலிக்குது, கவலை, பயம், ஏற்படுது இந்த வாழ்க்கையை வாழ,
ச்சீ அப்படியெல்லாம் யோசிக்க கூடாது, நிறைய நல்ல விஷயங்களும் நடக்கத்தான் செய்து, நல்லதவிட கெட்டது அதிகமா நடக்கிறதால நம்ம அதையே யோசிக்கிறோம் என நான் எனக்குள்ளே பேசிச்கொண்டு இருந்தேன்,!
சிறிது நிமிடத்தில் இரண்டு காஃபி கிளாசுடன் என் அம்மா எதிரில் வந்து அமர்ந்தார்கள்,
அம்மா முகத்தை பார்க்கும் போதே , ஏதோ யோசனை+ வருத்தமாக உள்ளது போல தெரிந்தது.
என்னாச்சு மா,
ஒண்ணுமில்லை, ! நம்ம பக்கத்து வீட்டு செல்வி அத்தைக்கு கொஞ்சம் உடம்பு முடியலையாம்,
யாரு சொன்னா,
காலையில கூட அவங்க பொண்ணு ப்ரியா ' வ பார்த்தேன், அவ என் கிட்ட ஒண்ணும் சொல்ல,
என் கிட்ட அந்த மாமா தான் சொல்லி வருத்தப்பட்டாரு,
அவங்க இப்பெல்லாம் எதற்கெடுத்தாலும் சிடுசிடு னு கோபப்படுறாங்களாம், திடிரென்று சிரிக்கிறாங்களாம், கொஞ்ச நேரத்தில் காரணமே இல்லாமல் கத்தி அழறாங்களாம், தனியாவே பேசுறாங்களாம் ,
ஏதாவது மனநல மருத்துவர் கிட்ட கூட்டிட்டு போணும் 'னு சொல்லிகிட்டு இருந்தார்,
நம்மள மீறி நம்ம மனசுல என்ன நடக்கப்போது , நாளைக்கி நான் செல்வி அத்தைக்கிட்ட பேசுறேன்' என அம்மாவிடம் சொன்னேன்,
அடுத்த நாள் , காலேஜ் விட்டு வந்து மதியம் செல்வி அத்தை வீட்டிற்கு சென்றேன் .
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் என்னை வரவேற்கும் அத்தை ,
என்னை பார்த்தவுடன் என்னம்மா, எதுக்கு வந்த என்று கேட்டார்கள், அந்த வார்த்தையே எனக்கு ஏதோ வித்தியாசத்தை தந்தது,
ப்ரியாவை பார்க்க வந்தேன் அத்தை , அவகிட்ட ஒரு புக் கேட்டேன் அதான்,
அவ friends கூட வெளியில போயிருக்கா , வர 7 மணி ஆகும்,
சரி அத்தை, நான் அப்ப வர்றேன்,
வீட்டிற்க்கு வந்தேன், அத்தையின் செயல் எனக்கு ஏதோ போல் இருந்தது ,
இதை சும்மா விடக்கூடாது,
அத்தையை எப்படியாவது நார்மல் நிலைமைக்கு கொண்டு வந்துவிடவேண்டும், என தோன்றியது,.
நான் School போக ஆரம்பித்தபோது அவர்கள் இங்கு குடிவந்தார்கள்,
ஒரே பெண் ப்ரியா , என்வயது தான் அவளுக்கும், மாமா Government Employee,
அந்த மாமாவும், ப்ரியாவும் கொஞ்சம் Reserved டைப்,
செல்வி அத்தை ரொம்ப கலகலப்பானவர் ,
சிறு வயதிலேயே கதைகள் சொல்வார்கள், எங்களுடன் ( அக்கம்பக்கத்து பிள்ளைகள்) சேர்ந்து கிரிக்கெட், கண்ணாமூச்சி விளையாடுவார்கள், மருதாணி இலையை அரைத்து விரல்களில் வைத்து விடுவார்கள், மாலை நேரத்தில் சுண்டல் செய்து தருவார்கள் ,
நாட்கள் செல்லச் செல்ல அனைவருக்கும் ஸ்கூல், எக்ஸ்ட்ரா ஆக்ட்விட்டி Classes, college, என commitments அதிகமாக ஆகிவிட்டது,
அதற்கே 24 மணிநேரம் போதவில்லை,
அத்தை என் இப்படி மாறினார்கள்,
7.30 மணியளவில் அவங்க வீட்டிற்கு சென்றேன் ,
ஹாலில் மாமா TV பார்த்து கொண்டு இருந்தார், என்னை பார்த்தவுடன் சிறு புன்னகையுடன் தலை அசைத்துவிட்டு மறுபடியும் TV யில் மூழ்கினார்,
ப்ரியா Room இல் இருந்தாள். யாருடனோ Mobile இல் பேசிக்கொண்டு இருந்தாள் ,
என்னை பார்த்தவுடன், I call u later என சொல்லிவிட்டு, என்னடி
என்றாள்,
Business Management Book வேணும்,
அலமாரியில் தேடி எடுத்து கொடுத்துவிட்டு Bye எனக்கூறி விட்டு, மறுபடியும் Mobile எடுத்து பேச சென்று விட்டாள்,
Kitchen இல் செல்வி அத்தை இருந்தார்கள், ப்ரியா விடம் Book வாங்கிட்டேன் அத்தை, Bye, Good night, அவர்களது முகத்தில் எந்த reaction னும் இல்லை,! ஏதோ வேலையாக இருக்கிறார்கள் , என நினைத்து என் வீட்டிற்க்கு வந்தேன்,
அத்தையை எப்படியாவது நார்மல் நிலைமைக்கு கொண்டு வந்துவிடவேண்டும் இதுதான் என் மனதில் ஓடி கொண்டே இருந்தது,
அடுத்த நாள்,
அத்தை, அத்தை என் college இல் Drawing Style Kolam னு ஒரு competition இருக்கு நீங்க தான் எனக்கு Help பண்ணனும் என ஒரு Unruled நோட்டைகொடுத்து உங்களுக்கு தெரிஞ்ச designs போட்டுதாங்க என்றேன்.
அதெல்லாம் இப்போ ஞாபகம் இல்லை ' மா.
அட போங்கத்தை நீங்கள்லாம் இந்த வார்த்தை சொல்லவே
கூடாது ,!
இதேபோல் அத்தையிடம் ஏதாவது சொல்லி அவங்க மனதை திசை திருப்பினேன் .
YouTube ல பார்த்தே ஆரிஒர்க் Blouseலாம் Ready பண்ணலாமாம் , Try பண்ணுங்கத்த, உங்களுக்கு இருக்கிற Talentக்கு சீக்கிரம் கத்துப்பீங்க,
சிறிது நாட்களுக்கு பின் அம்மாவிடம் , நான் போட்ட designs தான் நல்லா இருக்கா ,! உங்களுக்கும் ரெடி பண்ணி தர்றேன், , என அம்மாவிடம் பேசுவது கேட்டது,
என்னை சிரிக்க வைக்கும் videos, Jokes அவங்களுக்கும் WhatsApp share செய்வேன்,
Maths Tricks, தமிழ் குறுக்கெழுத்து புதிர், ஆகிய link குகளை அவர்களுக்கும் share செய்வேன் .
Comedy videos , jokes களுக்கு, மிகுந்த சிரிப்பையும்,
Maths Tricks, புதிர்களுக்கு Solve செய்து , எழுதியதை
பதிலாக தருவார்கள், இதை தொடர்ந்து செய்து வந்தேன்
எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது ஷாப்பிங், கோயில் என அத்தையையும் , எங்களுடன் அழைத்து செல்வேன்,
சில நேரங்களில் கண்ணாமூச்சி, கிரிக்கெட், பல்லாங்குழி, பாட்டுக்கு பாட்டு ,விளையாட்டு கள் கூட,
அதேபோல் பக்கத்து தெருவில் உள்ள யோகா சென்டருக்கு எனக்கு துணையாக வாங்கன்னு
கூட்டிட்டு போய் பழக்கப்படுத்தி விட்டேன்,
நான் ஒரு மாதத்தில் நின்றுவிட்டேன், அவர்கள் தினமும் செல்கிறார்கள், மிகவும் பிடித்து விட்டதாம் . நன்றாக தூக்கம் வருகிறதாம், அதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்குதாம்,
இப்போதெல்லாம் அத்தை முன்புபோல் நடந்துகொள்வதில்லை, என அந்த மாமா சொன்னதாக அம்மா ஒரு நாள் கூறினார்கள்.
மகிழ்ச்சி,
அடுத்த நாள் மாலை college விட்டு வரும் போது, செல்வி அத்தை சிரித்துகொண்டே,
வேலை எதுவும் இருந்தா முடிச்சிட்டுவா, அத்தை மருதாணி போட்டுவிடறேன்,
இந்தா சுண்டல் அம்மாவும், நீயும் சாப்பிடுங்க என்று ஒரு டிஃபன் box ஐ நீட்டினார்,
அத்தையின் மாற்றம் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆதரவாக உறவுகள் இருந்தால் அனைத்தையும் வெல்லலாம் என தோன்றியது.
*******----------**********







