முகநூல்
By மெ. கிஷோர் கான்
சமூக ஊடகங்களில் மூழ்கிய இளைஞர்கள்
முகப் புத்தகத்தில்
முகந்தனைப் புதைத்து
முத்தான பொழுதுகளை
முடிவின்றித் தொலைக்கின்ற
முப்பத்து முக்கோடி இளைஞர்கள்
மத்தியில் இடம்பிடித்தவரா நீங்கள்?
முயன்று வெளியேறுங்கள்,
முடிந்தால் உடனே வெளியேறுங்கள்!
வெளியேறும் வழி தெரிந்தால்
எனக்கும் வழி காட்டுங்கள்..!!!






