மிட்டாய் மனைவி
By ஸ்ரீ புஷ்பராஜ்
வரப்போகும் மனைவிக்கு முரளி என்பவர் ஒரு டைரி எழுதுகிறார் அதைப்பற்றி இது இந்த கதை
மிட்டாய் மனைவி
முரளி ஒரு சாதாரண இளைஞன்.
ஆனால் அவன் மனசுக்குள் வாழ்ந்த உலகம் சாதாரணம் இல்லை.
மழை வரும் நேரம், தேநீர் வாசனை, பழைய பாடல்கள் — இவையெல்லாம் சேர்ந்த ஒரு வாழ்க்கையை அவன் கற்பனை செய்தான். அந்த வாழ்க்கையின் மையத்தில் அவன் இன்னும் பார்க்காத ஒரு பெண் இருந்தாள். அவள்தான் அவன் “மிட்டாய் மனைவி”.
அவள் அழகாக இருக்கணும் என்பதல்ல அவன் ஆசை.
அவள் மனசு குழந்தை மாதிரி இருக்கணும் என்பதுதான்.
கோபப்பட்டாலும் இரண்டு நிமிஷம் கூட பேசாமல் இருக்க முடியாதவள்.
சிறிய விஷயத்திற்கே கண்கள் பிரகாசமாக சிரிப்பவள்.
பழைய காதல் பாடல்களை பாதியில் தவறாகப் பாடியும், தன்னம்பிக்கையுடன் சிரிப்பவள்.
முரளி எழுதும் கதைகளை முதலில் படிப்பவளாக இருக்க வேண்டும் அவள்.
“சூப்பர்” என்று பொய் சொல்லாமல்,
“இங்க கொஞ்சம் போரடிக்குது” என்று நேராக சொல்ல வேண்டும்.
மழை பெய்தால் பால்கனியில் நின்று கைகளை நீட்டி துளிகளை பிடிக்க வேண்டும்.
தெருவோர மிட்டாய் கடைக்கு அழைத்துச் சென்றால், குழந்தை போல நிறம் பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.
அவளுக்கு பெரிய கனவுகள் வேண்டாம்.
ஆனால் அவள் வந்த பிறகு அவன் வாழ்க்கையே பெரிய கனவாக மாற வேண்டும்.
ஒருநாள் இரவு முரளி தனது டையரியில் எழுதினான்:
“எனக்கு வரப்போகும் மனைவி…
என்னை மாற்ற வரக்கூடாது.
நான் சோர்ந்துபோனால் என் அருகில் அமைதியாக உட்கார்ந்து கையை பிடித்தால் போதும்.
வாழ்க்கை கசப்பாக இருந்தாலும், அவள் மட்டும் மிட்டாய் மாதிரி இனிப்பாக இருக்கணும்.”
அந்த வரிகளை எழுதிவிட்டு அவன் சிரித்தான்.
ஏனென்றால் அவன் இன்னும் அந்த பெண்ணை சந்திக்கவே இல்லை.
ஆனால் எங்கோ…
அதே நேரத்தில்…
ஒரு பெண், தனது டையரியில் இப்படித் தான் எழுதிக் கொண்டிருந்தாள்:
“” 💖
“என்னைப் புரிந்துகொள்ள ஒரு மனிதன் மட்டும் போதும்…”
எனக்கு வரப்போகும் மனைவி…
வாழ்க்கையில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் ரசிக்கக்கூடிய ரசிகையாக இருக்க வேண்டும்…
மழை வாசனை முதல் நள்ளிரவு தேநீர் வரை…
பழைய பாடல்கள் முதல் என் அமைதிவரை…
எல்லாவற்றையும் ரசிக்க வேண்டும்…
என்னையும் சேர்த்து…
வாழ்க்கை கசப்பாக இருந்தாலும்,
அவள் மட்டும் மிட்டாய் மாதிரி இனிப்பாக இருக்க வேண்டும்…
முரளி எழுதி விட்டான்......






