இரவு வேட்டை
By ஸ்ரீ புஷ்பராஜ்
சென்னை துறைமுகத்தில் தொடங்கும் கடத்தல் கும்பலை முறியடிக்க முன்னாள் கமாண்டோ அர்ஜுன் போராடுகிறார். நிழலில் செயல்படும் வில்லன்களை எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள ஆபத்தான நெட்வொர்க்கை அழிக்க அவர் மேற்கொள்ளும் அதிரடி வேட்டை தான் இந்த கதை.
சென்னை நகரம் இரவு அமைதியாக இருந்தாலும், துறைமுகம் மட்டும் தூங்கவில்லை. கடலில் இருந்து வந்த சரக்கு கப்பல்கள் அமைதியாக தரிப்பிடத்துக்கு வந்து நின்றன. அந்த கண்டெய்னர்களுக்குள் சட்டப்படி வர வேண்டிய பொருட்களோடு சேர்ந்து, யாருக்கும் தெரியாமல் ஆயுதங்கள், போதைப் பொருட்கள், high-tech சாதனங்கள் மறைத்து அனுப்பப்பட்டன. இந்த முழு கடத்தல் நெட்வொர்க்கை நிழலில் இருந்து கட்டுப்படுத்தியவன் “காரன்”. அவன் முகம் யாருக்கும் தெரியாது. அவன் உத்தரவு மட்டும் தான் எல்லோருக்கும் சட்டம்.
இந்த இருளில் காலடி எடுத்து வைத்தவன் அர்ஜுன். முன்னாள் கமாண்டோ. இப்போது தனியாக செயல்படும் வேட்டையாடி. ரகீம், கரண், தேவன் — எல்லாரையும் அவன் வீழ்த்தியிருந்தான். ஆனாலும் அவன் மனதில் ஒரு சந்தேகம் மட்டும் இருந்தது — “இவங்க எல்லாருக்கும் பின்னாடி யார்?”
ஒரு இரவு, அவனுக்கு கிடைத்த ஒரு சிறிய தகவல் அவனை நேராக துறைமுகத்துக்கு கொண்டு சென்றது. மழை தூறிக் கொண்டிருந்தது. க்ரேன்கள் நிழலாக நின்றன. அர்ஜுன் அமைதியாக உள்ளே நுழைந்தான். காவலர்களை ஒவ்வொருவராக சாய்த்தான். ஒரு கண்டெய்னரை திறந்தான். உள்ளே குவிந்து கிடந்தது ஆயுதங்கள். இன்னொரு கண்டெய்னர் — அதில் போதைப் பொருட்கள். இன்னொன்று — அதில் டிஜிட்டல் கட்டுப்பாட்டு கருவிகள். இது ஒரு சாதாரண கடத்தல் இல்ல, ஒரு பெரிய போர் தயாரிப்பு என்று அவனுக்கு புரிந்தது.
அந்த நேரத்தில் துப்பாக்கி சத்தம் ஒலித்தது. காரனின் மனிதர்கள் அவனை சுற்றிவிட்டார்கள். இருளில் வெடிப்புகள், சண்டை, துரத்தல். அர்ஜுன் ஒவ்வொருவரையும் வீழ்த்திக் கொண்டே முன்னேறினான். ஒருவனை பிடித்து “காரன் எங்கே?” என்று கேட்டான். அவன் சிரித்து “நீ அவனை பார்க்க முடியாது” என்று சொன்னான்.
அர்ஜுன் ஒரு மறைமுக அறையை கண்டுபிடித்தான். உள்ளே பெரிய ஸ்கிரீன். அதில் ஒரு நிழல் உருவம். அந்த குரல் மெதுவாக பேசத் தொடங்கியது. “நல்லா விளையாடுறே, அர்ஜுன்…” அது காரன். முகம் தெரியவில்லை. ஆனாலும் அவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். “நீ நிறுத்துறது ஒரு இடத்தை மட்டும்… ஆனா நான் முழு விளையாட்டு” என்றான்.
அந்தச் சொற்கள் முடியும் முன்பே துறைமுகம் முழுக்க அலாரம் ஒலித்தது. வெடிப்பு டைமர் தொடங்கியது. அர்ஜுன் வெளியே ஓடினான். பின்னால் கண்டெய்னர்கள் வெடித்து சிதறின. கடைசி நொடியில அவன் தப்பிச்சான். ஆனாலும் எல்லா சான்றுகளும் சாம்பலாயிற்று.
அவன் கடலை நோக்கி நின்றான். மழை முகத்தில் விழுந்தது. இந்த வேட்டை இப்போ தான் ஆரம்பம் என்று அவன் உணர்ந்தான். “இது இனிமேல் வேட்டை இல்ல… யுத்தம்,” என்று மெதுவாக சொன்னான். தூரத்தில் இன்னொரு கப்பல் வந்து நின்றது. அந்த இருள் இன்னும் முடிவடையவில்லை.






