குறுங்கதைகள்
By Rajesh
Short Sweet Stories.
சமீர்....
ஒரு சாதாரண போக்குவரத்து துறை இன்ஸ்பெக்டர்...
படித்ததெல்லாம் அரசு பள்ளி. தனது சொந்த ஊரில் வேலை. சமீர் தனது பணியில் மிகவும் சின்ஸியர் என்றே சொல்லலாம்...
ஏதாவது இளைஞர்கள் வண்டியில் வேகமாக சென்றாலும் அவர்களை அழைத்து போதும் போதும் என்றளவுக்கு அட்வைஸ் செல்லும் மனம் சமீருக்கு...
தினமும் தனது ஸ்டேஷனுக்கு வந்து கோப்புகளை பார்த்த பிறகு...அங்கு பக்கத்தில் இருக்கும் டீக்கடைக்கு சென்று ஒரு பொறை பொட்டலம் வாங்குவான்....அது அவன் நேசிக்கும் ஒரு நாய் குட்டிக்கு.அவனுக்காகவே காத்திருப்பது போல் அதுவும் தனது வாலை ஆட்டும்.
சமீர்...
போக்குவரத்து துறையில் பத்து ஆண்டுகள் வேலை செய்து ஏதோ அவனுக்கு பிடித்த ஒரு சின்ன பைக் வாங்கி இருந்தான்..
அந்த நான்கு சாலைகள் சந்திக்கும் சிக்னல் தான் சமீருக்கு பணி.
உச்சி வெயில். தனது வெள்ளை யுனிபார்ஃம். இன்னும் பளிச் என வெள்ளையாக பார்பவர்கள் கண்கள் கூசும் அளவுக்கு பணியில் ஒரே மும்முரமாக வாகனங்களை சாலையில் சிக்னல் காட்டி சரிகட்டி கொண்டிருந்தான்.
கலை...
இளைஞன்.....
தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டு...கோசிங் கிளாஸ் படித்துக்கொண்டிருக்கிறான்...
காரணம்
தான் ஒரு அரசு அதிகாரி ஆக வேண்டும் என்பதே கனவு....
அதனால்....
தனது ஊரிலிருந்து அருகில் உள்ள நகரில் இருக்கும் பயிற்சி நிலையத்திற்கு செல்வான்...
கலைக்கு
பள்ளியில் படிக்கும் காலத்தில் அந்த அளவுக்கு மதிப்பெண் கிடைக்கவில்லை....
அதனால் சொந்த ஊரிலே ஒரு அறிவியல் கலை கல்லூரில் சேர்ந்து படிப்பை முடித்தான்....
தனது பரம்பரையில் கல்லுரியில் படித்த முதல் தலைமுறை பட்டதாரி கலை தான்....
கலைக்கு வெளியூர் சென்று பழக்கமே இல்லை..
காரணம்...அவனுக்கு வெளி மாநிலம் என்றால் மொழி பிரச்சனை. உணவு பிரச்சனை என பல மன கட்டுப்பாடுகள் இருப்பதால் வெளி மாநிலத்திற்கு சென்று வேலை செய்யும் தேர்வுகளை தெரிவு செய்ய யோசிப்பான்...
மேலும் தனது அன்றாட செலவுகளுக்கு சின்ன சின்ன வேலைகள் செய்து வந்தான்.அப்படி செய்யும் வேலையில் ஏதேனும் வெளி மாநில நபர்களிடம் பேச நேரிட்டால் தனக்கு தெரிந்த ஆங்கிலம் வைத்து சமாளிப்பான். மேலும் கலைக்கு வெளி மாநில நபர்கள் நல்லவர்களா கெட்டவர்களா எப்படிபட்டவர்கள்...என்று தெரிந்துகொள்ளாமல் அவர்களிடம் பழகாமல் தவிர்ப்பதையே வழக்கமாக வைத்திருந்தான்.
ஏனெனில் அவனுக்கு வெளியூர் காரர்கள் என்றால் இரக்கமற்றவர்கள்...எதற்கும் சண்டைபோடும் இருமாம்பு உடையவர்கள் என கணித்துக்கொண்டிருந்தான்....
கலை மூன்று வேலையும் சோறு சாப்பிடக்கூடிய ஒரு ஆள்..
அவனால் ஒரு வேளை கூட சப்பாத்தி பரோட்டா சாப்பிடுவதை நினைத்து பார்க்க பயப்பட கூடியவன்....
கலை வெளியூர் செல்ல இந்த உணவு பழக்கமும் அவனுக்கு ஒரு தடையாக இருந்தது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில் கலைக்கு ஒரு எழுத்து தேர்வு நடைபெற இருப்பதால் தனது வீட்டிலிருந்து சாலைக்கு வருகிறான். ஏதாவது வண்டி வந்தால் ஏறிச் சென்று தேர்வு எழுதிவிட்டு வரலாம் என்று.
கான்....
இந்திக்காரர்...
பேரை பார்த்தே கண்டுப் பிடித்திருப்பீர்கள்..
கான் வீட்டில் சினிமா பைத்தியம் அதிகம் என்பதால் அவருக்கு கான் என அவரது அம்மா பெயர் வைத்து விட்டாள்.
கான் சின்ன வயதில் இருந்து தமிழ் எனும் மொழி இருக்கிறது என்றே தெரியாத ஒரு எழுத படிக்க தெரியாத ஒருவர்...
அவருக்கு தெரிந்தது ஸ்டைரிங்.. ப்ரேக்... எக்ஸிலேடர். அவ்வளவுதான்...
கான் இந்தியில் பேசிதான் இங்கு இருக்கும் கடைகளில் சாப்பாடு டீ எல்லாம் சாப்பிடுவார்....
அப்படியிருக்க....... இங்கு இருக்கும் டீக்கடை காரனும்,ஓட்டல் கடைக்காரனும், தான் கானுக்கு மொழிபெயர்ப்பாளர்கள்...கான் வாழ்க்கை மிகவும் கடினமானது. குறைந்தது ஆயிரம் கிலோமீட்டர்கள் ஒரு நாளைக்கு ஓட்டி சென்று தனது வண்டி களில் இருந்து சரக்கை இறக்கி விட்டு வருவார்....
கான் ஒரு கடையில் வாடகைக்கு வண்டி ஓட்டும் ஒரு ஓட்டுநர்...
தினமும் வரும் கூலியை சேர்த்து, சேர்த்து,அதை தனது ஊரிலுள்ள மனைவி பிள்ளைகளுக்கு மணியார்டர் செய்வார்.
கான் படிக்கவில்லையே தவிர... வாழ்க்கையை படித்தவர்..அவர் வண்டி ஓட்டும் போது அவ்வளவு நிதானம் தெரியும்... மேலும் தனது வேலை முடித்து தனக்கு தேவையானதை வாங்கி கொண்டு (வாரம் ஒரு முறை சரக்கு) போட்டுவிட்டு இரவில் நிம்மதியாக தூங்கும் ஒருவர்.
சுருக்கமாக சொன்னால் கான் ஒரு யதார்தவாதி...
தானுண்டு வேலையுண்டு என இருப்பவர்....
கான்.அன்று காலை தனது வண்டிக்கு பூஜை போட்டு,முதல் சவாரியாக லோட் ஏற்றிக்கொண்டு கிளம்பினார். எப்போதும் போல நிதானம் தவறாமல் ஒட்டிக்கொண்டு போகும்போது வழியில் லிப்ட் கேட்டு நின்றிருந்தான் கலை.
கலை தனது போட்டி தேர்வுகளின் பயிற்சி வகுப்புக்கு தினமும் பஸ்ஸில்தான் செல்வான். இன்று பஸ் வரவே இல்லை. நமது ஊர் பஸ் தான் எப்போதும் நேரத்துக்கு வந்ததே இல்லையே. வைரமுத்து சொன்னதுபோல பஸ்ஸை எதிர்ப்பார்த்து பாதி வயசாசி.
கான்னும் கலையும் வண்டியில் வந்து கொண்டு இருக்கிறார்கள்.
கான்னிடமும் கலையுடனும் ஒரே மெளன மொழி. காரணம் மொழி மட்டும்.
இருவருக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர் இல்லை அதனால்.வண்டி சரியாக சிக்னலை கடக்க சிறிது தூரம் இருக்கிறது...
சிக்னலில் சமிர்...
வாகனங்களை சரிசெய்ய பார்த்துக்கொண்டிருக்க...தான் தினமும் பிஸ்கட் கொடுக்கும் நாய்க்குட்டி சிக்னலை கடக்க முயன்றது... அதனை பார்த்ததும் சமீர் ஒரு நிமிடம் திகைத்து கண்களில் கண்ணீர் சொட்டி விடுமே என்பதுபோல் உறைந்துவிட்டான். ஏனெனில் நாய்க்குட்டி எதிர்வரும் வண்டியை கவனிக்காமல் ஓடி வந்து கொண்டிருந்தது.
கலையும் ஏன் வண்டி சடாரென நின்றது தெரியாமல் வண்டியின் இடது கதவு வழியாக வெளியே தலையை நீட்டிப்பார்த்தான். நாய்க்குட்டி மெதுவாக வண்டியின் முன்பு கடந்து சென்று கொண்டிருந்தது... கான்னின் மமொழி
கால் பிரேக் பெடல் மேல் இருந்தது....
கான் எந்த வித பதற்றம் இல்லாமல் மெதுவாக நாய்க்குட்டி கடந்ததும் வண்டியை நகர்த்தினார்...
அப்போது
சமீருக்கும்
கலைக்கும்
கான்
மீது மிகப்பெரிய
மரியாதையும்
நன்றியும்
மனதிற்குள் வந்தது.
வாழ்க்கை அழகானது.....
அன்பு ஒன்று இருக்கும்வரை
உலகம் மொழி என்ற ஒன்றை எதிர்பார்க்க தேவையில்லை...
சிக்னலில்
சிவப்பு
மஞ்சள்
பச்சை
மொழி பேசிக்கொண்டு இருக்கையில்...






