அவளே ரசவாதி
By நி வே ராஜா
திசைகள் திரை கடந்து திருவுருவம் திருவாய் மலர்ந்து திங்கள் முதலாய் தினம் யாவும் புதிதாய் திறவுகோல் தொடுத்து திரு காட்சி கொடுத்த தில்லை நாயகியே! நாணம் நாதம் பாட நானும் நாயகி தாள் சேர, வெண் வெள்ளி தரித்த வெண் காந்தள் மலர்ந்த வெண்ணிலாவை மருவிய வெண்கல விழிகளே வெந்து தணிய, செம்பு கலந்த செங் கமலமே செவ்வாய் மலர்ந்த செந்தமிழ் களஞ்சியமே செவ்விதழ் அமுதுறும் செங்கதிரழகோ தேகம் கொல்ல! பளிங்கு பதித்த பாவையின் பன்னீர் தெளித்த பனி பொழிந்த பல்கவி பூட்டும் பகிக்கும் கழுத்தோ பலரசம் சொட்ட! வாகை சூடும் வஞ்சமும் வான் கொழிக்கும் மழையும் வாரி அணைத்து மகிழும் நெஞ்சமும்! காதல் பாடிய கவியரசனும் கார்முகில் சூடிய கதிரவனும் கரை தேடிய இடையும்! அவளின் வசம் இருக்க, கவி நடையால் சொற்கள் வழி மாலையால் காதல் சொல்லி, செந்தாமரை அவளின் தேகம் தீண்டி தேன் குழலும் யாழ் இசை மீட்டி தேவ இன்பம் நான் காண, அமிழ்தம் அளித்தது அவளா அவளால் புனைந்த கவியா சொல்லுங்களேன்!






