? துடுப்பில்லா ஓடம் போல செல்கிறது நம் வாழ்க்கை. நாம் துடுப்பு பிடித்திருக்கிறோம் என்று நினைப்பது கூடத் தவறு, காரணம், பல விஷயங்கள் நம் கையில் இல்லை. காற்று தீர்மானிக்கும் திசையை “என் தேர்வு” என்கிறோம், அலை தள்ளும் பாதையை “என் முயற்சி” என்று நினைக்கிறோம். சில நேரம் முன்னேற்றம், சில நேரம் பின்னேற்றம்— அதற்கெல்லாம் காரணம் நாம் மட்டும் அல்ல. எதிர்ப்பதற்குப் பதிலாக ஒத்திசைவது தான் அறிவு, பிடிவாதத்திற்குப் பதிலாக பொறுமை தான் பலம். கரை எங்கே என்று தெரியாமல் நம் பயணம் தொடர்கிறது, ஆனால் அமைதி கிடைக்கு மிடமே உண்மையான கரையாகும். துடுப்பு இல்லாத ஓடம் இது— ஆனால் அர்த்தமில்லாத பயணம் அல்ல நம் வாழ்க்கை, என்பதை உணர். (V R K) ( 83 Words)
© 2026 Kannan. All rights reserved.
Unauthorized reproduction prohibited. This content is protected by copyright law.
by Maivizhi