'கோவை மெட்ரோ' இந்த நாவலின் ஆசிரியர் பல நாவல்களை எழுதியுள்ளார். இந்த
'கோவை மெட்ரோ' நாவலில் பல புள்ளி விவரங்களை படித்து அதை எங்கு சுருக்கமாக சொல்ல வேண்டுமோ அதை சொல்லி கதை ஓட்டத்தை திசை திருப்பாமல் கொண்டு செல்ல முயன்று உள்ளார்.
நகரமயமாக்கல் பற்றிய உளவியல் பார்வையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை நகரமயமாக்களில் உள்ள இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க இயலாது; பிரச்சனை இது போன்ற நகரங்களில் வாழும் சமூக மக்களிடம் இல்லை. உள்ளே எழும் குற்ற உணர்வு தான் காரணம் என இந்த நாவலை முடித்த விதம் எனக்கு பிடித்து இருந்தது.